வாலாஜா அருகே; மதுபாட்டில்கள் விற்றவர் கைது

வாலாஜா அருகே மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
வாலாஜா அருகே; மதுபாட்டில்கள் விற்றவர் கைது
Published on

வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த பூண்டி கிராம அணைக்கட்டு தெருவில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் அணைக்கட்டு தெருவில் வசிக்கும் யுவராஜ் (வயது 47) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.

அதில் 137 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக யுவராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com