புதிய பள்ளி வகுப்பறை

மேல காசாகுடி கிராமத்தில் புதிய பள்ளி வகுப்பறையை அமைச்சர் சந்திரபிரியங்கா திறந்து வைத்தார்
புதிய பள்ளி வகுப்பறை
Published on

நெடுங்காடு

நெடுங்காடு அடுத்த மேல காசாகுடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பொதுப்பணி துறை சார்பில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன.

புதிதாக கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகளை, புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா  திறந்து வைத்தார். மேலும் பள்ளியில் படிக்கும் 103 மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை, தையல் கூலி மற்றும் இலவச நோட்டு புத்தகம் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com