‘செப்டிக் டேங்க்’ அமைப்பில் புதிய தொழில்நுட்பம்

வீடுகளில் உள்ள கழிவறைக்கான ‘செப்டிக் டேங்க்’ அமைப்பில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அதை சுத்தம் செய்வது அவசியம். இன்றைய நெரிசலான நகர்ப்புறங்களில் அமைந்துள்ள வீடுகள் அல்லது குடியிருப்புகளில் ‘செப்டிக் டேங்க்’ சுத்தம் செய்யும் பணிகளை செய்வது சிரமமான பணியாக உள்ளது.
‘செப்டிக் டேங்க்’ அமைப்பில் புதிய தொழில்நுட்பம்
Published on

இன்றைய நாகரிக வளர்ச்சியில் செப்டிக் டேங்க் அமைப்பிலும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிக்கல்களுக்கு ஒரு தீர்வாக பயோ செப்டிக் டேங்க் அமைப்பு இருப்பதாக அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புதுமையான முறையாக உள்ள இந்த தொழில்நுட்பம் பற்றி அவர்கள் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம்.

வீடுகள், அடுக்குமாடிகள் உள்ளிட்ட வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவன கட்டிடங்கள் ஆகியவற்றில் இந்த பயோ செப்டிக் டேங்க் அமைப்பை எளிதாக அமைத்துக்கொள்ளலாம். ஒரே ஒருமுறை இந்த டேங்கில் நிரப்பப்படும் நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்கள் வாழ்நாள் முழுவதும் செயல்படும் தன்மை பெற்றவை. குறிப்பாக, பிராண வாயு உதவி இல்லாமல் உயிர் வாழும் தன்மை கொண்ட இவ்வகை நுண்ணுயிரிகள் மனித கழிவை உணவாக உட்கொள்கின்றன. அதன் காரணமாக, டேங்கில் இருந்து வெளியேறும் தண்ணீரில் எவ்வித துர்நாற்றமும் வீசாது.

மேலும், இதர நிலத்தடி செப்டிக் டேங்க் வகைகளில் உள்ள பிரச்சினையான நிலத்தடி நீர் பாதிப்பு என்ற அபாயம் இந்த முறையில் இல்லை. குறிப்பாக, செப்டிக் டேங்க் பராமரிப்பு செலவுகள் எதுவும் கிடையாது. இன்றைய சூழலில் வழக்கமான செப்டிக் டேங்க் கட்டுவதற்கு ஆகும் மொத்த செலவில் கிட்டத்தட்ட 40 முதல் 50 சதவிகிதம் மட்டுமே இந்த அமைப்பின் மொத்த பட்ஜெட் ஆகும். இந்த முறைக்கு பாதாள சாக்கடை இணைப்பு அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம் என்றும் பயோ செப்டிக் டேங்க் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com