கடந்த 12 மாதங்களில் கோரக்பூரில் ஆயிரம் குழந்தைகள் பலி ; அகிலே‌‌ஷ் யாதவ் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த 12 மாதங்களில் ஆயிரம் குழந்தைகள் பலியாகி இருப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 12 மாதங்களில் கோரக்பூரில் ஆயிரம் குழந்தைகள் பலி ; அகிலே‌‌ஷ் யாதவ் குற்றச்சாட்டு
Published on

லக்னோ,

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மாதத்தில் 100 குழந்தைகள் இறந்த விவகாரத்துக்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று லக்னோவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோடாவில் ஏற்பட்ட மரணம் குறித்து யோகி கவலைப்படுகிறார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்த மரணங்கள் குறித்து அவர் எப்போது கவலைப்படுவார்?

அங்கு கடந்த 12 மாதங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு வேறு மருந்துகள் தரப்பட்டுள்ளன. ஏன் தவறான மருந்துகள் தரப்பட்டன? இதற்கு பதில் சொல்ல போவது யார்? இதில் உண்மை வெளிவர வேண்டும். இறந்த குழந்தைகள் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com