திண்டுக்கல்லில் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது

திண்டுக்கல் அரசு பெண்கள் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது
Published on

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள், இன்று முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் 2021, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) அனைத்து பள்ளி மாணவர்களும் 04.10.2021 (திங்கள்கிழமை) அன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை புரியும் தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு பெண்கள் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வேலைவாய்ப்பிற்காக மதிப்பெண் சான்றிதழ் பதிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com