கோலா தங்கவயல்,
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா குண்டரசனஹள்ளி கிராமம் வனப்பகுதியையாட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி சிறுத்தை, புலி, காட்டு யானை ஆகிய வனவிலங்குகள் வௌயேறி கிராமங்களில் புகுந்து அட்டகாசம் சய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுத்த ஒன்று கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடுகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்து வருகின்றது.
இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜப்பா. விவசாயி. இவா தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து 20-க்கும் மேற்பட்ட சம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நாகராஜப்பா தனது செம்மறி ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சன்றுவிட்டார். இந்த நிலையில் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வளியேறிய சிறுத்தை ஒன்று, அந்த கொட்டகையில் புகுந்து செம்மறி ஆடுகளை கடித்து குதறியது. இந்த நிலையில் செம்மறி ஆடுகள் கத்தும் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜப்பா, காட்டகைக்கு வந்து பார்த்தார்.
அந்த சமயத்தில், ஆள் வருவதை அறிந்ததும் கொட்டகையில் இருந்து சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டது. கொட்டகையில் ஆடுகள் செத்து கிடப்பதை பார்த்து நாகராஜப்பா அதிர்ச்சி அடைந்தார். சிறுத்தை தாக்கியதில் 12 செம்மறி ஆடுகள் செத்தது தெரியவந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களை வனத்துறையினர் ஆய்வு சய்தனர். அப்போது அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி சய்யப்பட்டது. இதனால் பீதியடைந்துள்ள கிராம மக்கள், அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயி நாகராஜப்பாவுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனா.