12 வயது சிறுமி கற்பழித்து கொலை; 7 மாணவர்கள் கைது

12 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Published on

தேஸ்பூர்,

அசாம் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. விஸ்வநாத் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் மாலையில் தேர்வு முடிந்ததும், நண்பர் ஒருவர் வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். 12 வயது சிறுமி ஒருவரும் இந்த விருந்துக்கு அழைக்கப்பட்டு இருந்தார். விருந்தின் போது 7 மாணவர்களும் அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வீட்டுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் சிறுமியின் உடலை தூக்கில் தொங்கவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோபூர் போலீசார் 7 மாணவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com