சரக்கு ரெயிலில் 1,330 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது

காரைக்காலில் இருந்து சரக்குரெயிலில் 1,330 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது.
Published on

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்காக வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது.

சாகுபடி செய்வதற்கு வசதியாக வயல்களை தயார் செய்யும் பணி, நாற்றுகள் நடும் பணி போன்றவற்றில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடி நெல் விதைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உர மூட்டைகளை ஏற்றி கொண்டு தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு ஊர்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு லாரிகள் சென்றன. அதேபோல் மயிலாடுதுறையை நோக்கி உர மூட்டைகளுடன் லாரி ஒன்று சென்றது.

தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நடுவழியில் லாரி நின்றுவிட்டது. என்ன காரணம்? என டிரைவர் பார்த்தபோது டீசல் இல்லாதது தெரியவந்தது.

மேம்பாலத்தில் லாரி நின்றதால் கார்களில் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பின்னர் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு டிரைவர், சென்று கேனில் டீசல் வாங்கி வந்து லாரிக்கு ஊற்றினார். அதன்பிறகு லாரி புறப்பட்டு சென்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com