தெலுங்கானாவில் நேற்று மேலும் 1,550 பேருக்கு கொரோனா பாதிப்பு

தெலுங்கானாவில் நேற்று மேலும் 1,550 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on

ஹைதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தெலுங்கானாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானாவில் நேற்று புதிதாக 1,550 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 36,221 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் நேற்று மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 1,197 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 23,679 ஆக உயர்ந்துள்ளது. .தற்போது வரை 12,178 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com