திருவள்ளூர் அருகே ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
Published on

அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் 19 மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கண்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அந்த மோட்டார் சைக்கிளில் உள்ள எண்களை வைத்து அந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் யார் என்று மணவாளநகர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com