இதையடுத்து சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் போலீசார் நேரில் சென்று பார்த்த போது அங்கு போலீசார் வருவதை கண்டதும் 3 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட முயன்றது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 2 பேரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர் (வயது 52), வாசு (23) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.