அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 3 பேர் பலி

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
Published on

சிகாகோ,

அமெரிக்காவின் இலினாஸ் மாகாணத்தில் லிங்கன் டவுன்ஷிப் அருகே உள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. தரையில் மோதிய உடனேயே அந்த விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனால் அதில் இருந்த 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த நேரத்தில் சாலையில் வேறு எந்த வாகனமும் வராததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. விபத்தில் சிக்கிய விமானம் 4 இருக்கைகள் கொண்ட செஸ்னா 172 வகையை சேர்ந்ததாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com