வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 325 தமிழர்கள் தாயகம் திரும்பினர்

சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து 325 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
Published on

சென்னை,

கொரோனா ஊரடங்கால் லண்டன், அபுதாபி ஆகிய நாடுகளில் சிக்கிய 325 தமிழகர்கள் 2 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தனர். விமான நிலைத்திலேயே சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அவர்கள், அரசு பேருந்துகள் மூலம் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஒட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு மீண்டும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஒமன் நாட்டில் இருந்து வந்த 4 பேர், குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து வந்த தலா 3 பேர் என 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com