புதிதாக 3,390 பேருக்கு நோய் தொற்று: மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 120 பேர் பலி

மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 390 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் 120 பேர் பலியாகி உள்ளனர்.
Published on

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 390 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 958 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 50 ஆயிரத்து 978 பேர் குணமடைந்து உள்ளனர். 53 ஆயிரத்து 17 பேர் சிகிச்ச பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் நோய் தொற்றுக்கு புதிதாக 120 பர் பலியாகி உள்ளனர். இதில் 69 பேர் மும்பையையும், 4 பேர் தானேயையும், 5 பேர் உல்லாஸ்நகரையும், 7 பேர் அவுரங்காபாத்தையும், தலா 11 பேர் புனே, ஜல்காவையும் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வசாய் விரார், சோலாப்பூர், ரத்னகிரி, அகோலா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். இதுவரை மராட்டியத்தில் 3 ஆயிரத்து 950 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

மாநிலத்தில் குணமடைந்தவர்கள் சதவீதம் 47.2 ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் சதவீதம் 3.65 சதவீதம் ஆகும். தற்போது மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 87 ஆயிரத்து 596 பேர் வீடுகளிலும், 29 ஆயிரத்து 641 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள 1,535 தனிமை மையங்களில் 77 ஆயிரத்து 189 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

மும்பை நிலவரம்

மும்பை மாநகராட்சி பகுதியில் நேற்று புதிதாக 1,395 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 226 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல 2 ஆயிரத்து 182 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பையில் இதுவரை 26 ஆயிரத்து 986 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். தற்போது 29 ஆயிரத்து 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற பகுதிகள் விவரம்

மராட்டியத்தில் மும்பை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே - 18,080 (434 பேர் பலி), பால்கர் - 2,326 (50), ராய்காட் - 1,868 (64), நாசிக் - 1,934 (105), புனே - 12,184 (480), அவுரங்காபத் - 2,668 (135), அகோலா - 1,021

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com