ஒடிசாவில் ரிக்டர் 3.6 அளவிளான நிலநடுக்கம்

ஒடிசாவின் ராயகடாவில் ரிக்டர் 3.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் இன்று மாலை 4.40 மணிக்கு 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் மையம் ராயகடா மாவட்டத்தில் காசிபூர் பகுதியில் அமைந்திருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஒடிசா மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com