பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 4 வீரர்கள் பலி

பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 4 வீரர்கள் பலியாயினர்.
Published on

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள இசபெல்லா மாகாணத்தில் கவாயன் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான யூஎச்1டி ஹூய் ரக ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.இந்த ஹெலிகாப்டரில் 2 விமானிகள் உட்பட 5 ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகிலேயே ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com