நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
Published on

காத்மாண்டு,

நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள டைலேக் மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக அதிர்ந்ததால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com