7 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் - மக்களவை சபாநாயகருக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

7 எம்.பி.க்களை மக்களவை சபாநாயகர் சஸ்பெ​ண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 2-ந் தேதி தொடங்கியது.

அன்று முதல், டெல்லி கலவரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு சபைகளையும் முடக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவை சபாநாயகரின் மேஜையில் இருந்த காகிதங்களை எடுத்து, அவர் முன்பு கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது என்று சபாநாயகர் உத்தரவிட்டார்

இது தெடர்பாக ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் ஜனநாயகத்தின் கேவில் நாடாளுமன்றம் என அடிக்கடி கூறப்பட்டு வரும் நிலையில், பா.ஜ.க. அரசு அதனை மீண்டும் உறுதி செய்ய வேண்டிய தருணம் இது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகர் உடனடியாக 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com