கோவில்பட்டி,
கோவில்பட்டி பயணியர் விடுதியில் ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து தையல் தொழிலாளர்கள், சாக்கு தைக்கும் தொழிலாளர்கள் உள்பட 750 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கோவில்பட்டி யூனியன் துணை தலைவர் பழனிசாமி, முன்னாள் யூனியன் துணை தலைவர் சுப்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குலசேகரன்பட்டினம் திரு அருள் மேல்நிலைப்பள்ளி சார்பில், அங்கு பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி கல்விக்குழு உறுப்பினரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான சிவ பழனீசுவரன் தலைமை தாங்கி, 150 மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் சங்கர நாராயணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.