நைஜீரியா: பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் உருண்டு விபத்து - 9 பேர் பலி, 5 பேர் காயம்

நைஜீரியாவின் பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று தாறுமாறாக ஓடி பள்ளத்தில் உருண்ட விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
Published on


* இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சகத்தில் உயர் பதவியில் இருந்த அதிகாரி சர் பிலிப் ருத்னம் பதவியை ராஜினாமா செய்ததற்கு, உள்துறை மந்திரி பிரித்தி பட்டேல் வருத்தம் தெரிவித்துள்ளார். அமைச்சகத்தில் ஒவ்வொருவரின் பணியையும் தான் மதிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

* தென்கொரியாவின் தென்சுங்சியோங் மாகாணத்தின் தென்மேற்கு நகரமான சியோசனில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 36 பேர் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தினால் ஆலையின் அருகில் உள்ள பல வீடுகளும், வணிக வளாக கட்டிடங்களும் சேதம் அடைந்தன.

* நைஜீரியாவின் மேற்கு மாகாணமான குவாராவில் 14 பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி தாறுமாறாக ஓடி பள்ளத்தில் உருண்டது. இதில் 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காயமடைந்த 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* சோமாலியா நாட்டில் அல் சபாப் பயங்கரவாதியான ஈசாக் நிஷோ கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து வெடிகுண்டுகள் பொருத்திய பெல்ட், ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதை அரசு செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் முக்தர் ஒமர் உறுதி செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com