தாய்லாந்தில் புறப்பட தயாரானபோது விமானத்தின் அவசரகால கதவை திறந்த போதை வாலிபர்

தாய்லாந்தில் புறப்பட தயாரானபோது விமானத்தின் அவசரகால கதவை போதை வாலிபர் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாய்லாந்தில் புறப்பட தயாரானபோது விமானத்தின் அவசரகால கதவை திறந்த போதை வாலிபர்
Published on

பாங்காக்,

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள சியாங்மாய் நகரத்தில் இருந்து தலைநகர் பாங்காக்குக்கு தாய் ஸ்மைல் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 80 பயணிகள் இருந்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து சென்று, விமானத்தின் அவசரகால வழியை திறந்தார். இதில் கதவு முழுவதுமாக திறந்துவிட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர்.

இது குறித்து விமான ஊழியர்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, புறப்பட தயாராக இருந்த விமானம் நிறுத்தப்பட்டு விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com