

புதுடெல்லி,
டெல்லி காந்தி நகர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அனில் பாஜ்பாய், நேற்று பா.ஜனதாவில் சேர்ந்தார். மத்திய மந்திரி விஜய் கோயல் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார். வருகிற 12-ந் தேதி, டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், அவர் கட்சி மாறி உள்ளார்.