ஊத்தங்கரை,
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 6 மூட்டைகள் இருந்தது.