சாத்தான்குளம் சம்பவம் குறித்த நடிகர் ரஜினியின் கருத்தில் உடன்பாடு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சொன்னது எங்களுக்கு உடன்பாடான கருத்துதான் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம் குறித்த நடிகர் ரஜினியின் கருத்தில் உடன்பாடு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
Published on

சென்னை,

சென்னையில், இன்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொரோனா நுண் களப் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை முழுமையாக தமிழக அரசு செய்து வருகிறது என்றும், தவறு செய்தவர்கள் தக்க தண்டனையை அனுபவித்தே தீருவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்து பற்றி பேசிய அவர், சாத்தான்குளம் மரணம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சொன்னது எங்களுக்கு உடன்பாடான கருத்துதான் என்று கூறினார்.

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறை குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com