நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள்; துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம், மந்திரிகள் மரியாதை

நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அரசு சார்பில் துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம், மந்திரிகள் மரியாதை செலுத்தினர்.
Published on

சென்னை,

நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் அவரது உருவ படத்திற்கு துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

அதன்பின் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அரசு விழாவாக அறிவித்து நடிகர் சிவாஜி கணேசனுக்கு பெருமை சேர்த்தது அ.தி.மு.க. அரசே என கூறினார்.

அவர் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படியே மெரீனாவில் இருந்து சிலை நீக்கப்பட்டு அடையாறில் வைக்கப்பட்டது. அவரது சிலையை மீண்டும் மெரீனாவில் வைக்கும்படி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வருமென்றால் அதனை அரசு பரிசீலனை செய்யும் என்றும் அவர் கூறினார்.

இதேபோன்று நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு ஆகியோரும் சிவாஜி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, சிவாஜி கணேசனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. சிலையின் கீழ் கருணாநிதியின் பெயரை பொறிக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com