அ.தி.மு.க. வேட்பாளர் வைத்தியநாதன் இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்கும்படி மக்களிடம் கண்ணீர் மல்க கோரிக்கை

பூந்தமல்லி இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்கும்படி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வைத்தியநாதன் மக்களிடம் கண்ணீர் மல்க வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக வைத்தியநாதன் போட்டியிடுகிறார்.

இவர் திறந்த வேனில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார். பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பாரிவாக்கம், பாணவேடு தோட்டம், கோளப்பன்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த தேர்தல் பிரசாரத்தில், மக்களுக்காக பணியாற்ற தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு பொதுமக்களிடம் அவர் கண்ணீர் மல்க வாக்கு சேகரித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com