

இதில் நடிகராக பிருத்விராஜூம், மோட்டார் வாகன ஆய்வாளராக சுராஜ் வெஞ்சாரமூடுவும் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரூ.4 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், பாக்ஸ் ஆபீசில் ரூ.25 கோடியை வசூல் செய்தது. எந்த மொழிக்கும் ஏதுவாக அமைந்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை, பாலிவுட்டில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.
இதில் பிருத்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய்குமாரும், சுராஜ் வெஞ்சாரமூடு நடித்த கதாபாத்திரத்தில் இம்ரான் ஹாஷ்மியும் நடிக்க இருக்கிறார்கள். பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் திரைக்கதையில் சிறிய மாற்றம் செய்யப்பட இருக்கிறதாம்.