அமேதி கப்பல் மூழ்குவதால் கேப்டன் வயநாடுக்கு ஓடிவிட்டார் - ரவிசங்கர் பிரசாத் கேலி

அமேதி கப்பல் மூழ்குவதால் கேப்டன் வயநாடுக்கு ஓடிவிட்டார் என ரவிசங்கர் பிரசாத் கேலி செய்துள்ளார்.
Published on

பாட்னா,

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவது சங்கடமானது, பாதுகாப்பற்றது, உதவாதது என்று உணர்ந்துள்ளார். அதனாலேயே அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அங்குள்ள இன விவரங்களின் அடிப்படையில் அது பாதுகாப்பானது என்பதாலேயே அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதாவது அமேதி கப்பல் மூழ்குகிறது என்பதை தெரிந்துகொண்ட கேப்டன் தப்பி வயநாடு என்ற சரணாலயத்தில் கரையேறுகிறார். அங்கு 49.48 சதவீதம் பேர் இந்துக்கள், மற்றவர்கள் சிறுபான்மையினர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com