ஒடிசாவில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை அமித் ஷா வெளியிட்டார்

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை அமித் ஷா இன்று வெளியிட்டார். #AmitShah
Published on

புவனேஷ்வர்,

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் இணைந்து நடைபெற உள்ள நிலையில், பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா ஒடிசா மாநிலத்துக்கான தேர்தல் வாக்குறுதியை இன்று வெளியிட்டார். அதில், ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமர் விவாசயத் திட்டம் நிறைவேற்றுதல் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன். ரூ.1 லட்சம் கோடி வரையிலும், நிதி நிறுவன முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு சிறை, அதில் முதலீடு செய்தவர்களிடம் உரிய பணத்தை திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புவனேஷ்வர் மற்றும் கட்டாக் இடையில் மெட்ரோ ரயில் சேவை. உயர்கல்வியில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இலவச இருசக்கர வாகனம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.3,500 கோடி செலவில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி. ஒரு சதவீத வட்டியில் ஒருவருக்கு ரூ.3 லட்சம் என சுயதொழில் தொடங்க ரூ.3 ஆயிரம் கோடி கடன். ஆயிரம் கோடி ரூபாயில் சுயதொழில் திட்டங்கள். 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு உச்சகட்ட தண்டனை போன்றவை பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.

இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டில் மத்திய-மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com