அரக்கோணம்,
அம்மா திட்ட முகாமிற்கு சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் மதிவாணன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் மதி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் கல்யாணி வரவேற்றார்.
முகாமில் 24 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 12 மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. முடிவில் கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா நன்றி கூறினார்.