உலகைச்சுற்றி...

* சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஜித்தியான் நகரில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் அந்த நகரம் வெள்ளக்காடாகி உள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிர் இழந்துள்ளனர். 2 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.
Published on

* நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம், நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த, ராணுவ வீரரான மார்க் ஸ்டீவன் (வயது 26) என்பவர் சதி திட்டம் தீட்டி வந்தது ரகசிய உளவாளி மூலம் கண்டறியப்பட்டது. அதன்பேரில் அவரை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் இந்தியரான தல்வீர் சிங் (24) போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவரை காரில் இருந்து வெளியே இழுத்து, சரமாரியாக தாக்கிவிட்டு பின்னர் அவரது காரை திருடி சென்றார். இது தொடர்பான வழக்கில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

* மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் கட்டும் முடிவில் தீர்க்கமாக உள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கூடுதலாக 320 படை வீரர்கள் மெக்சிகோ எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com