சென்னை,
சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலை தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். மெட்ரோ ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள பஸ் நிலையம், புறநகர் மின்சார ரெயில் நிலையம், பறக்கும் ரெயில் நிலையங்களோடு இணைக்கும் வகையில் ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில், கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி, டி.எம்.எஸ்., அண்ணாநகர் கிழக்கு ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் கார் வசதி உள்ளது.
அதேபோல், கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, பரங்கிமலை நிலையங்களில் ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. இது தவிர வாடகை சைக்கிள் வசதி அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ளது. திருமங்கலம், விமானநிலையம், சின்னமலை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வாடகை மோட்டார் சைக்கிள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.