முசிறியில் பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் பெண் பலி

முசிறியில் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.
முசிறியில் பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் பெண் பலி
Published on

முசிறி,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி மணி என்கிற விஜயலட்சுமி(வயது 45). தையல் தொழிலாளி. பெரியசாமி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் விஜயலட்சுமி, நேற்று முன்தினம் நாமக்கல்லில் இருந்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டுள்ளார். அன்று இரவு தொட்டியம் அருகே உள்ள சீனிவாசநல்லூர் பெரியகாண்டி அம்மன் கோவிலுக்கு வந்த பாதையாத்திரை குழுவினர் சுமார் 90 பேர், அங்கு தங்கினர்.

பின்னர் நேற்று அதிகாலை பாதையாத்திரை குழுவினர் சமயபுரம் நோக்கி நடக்க தொடங்கினர். முசிறியில் சேலம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அவர்கள் வந்தபோது பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த கார், பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் கார் மோதி விஜயலட்சுமி படுகாயமடைந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர்.

அவர்களை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு விஜயலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் காயமடைந்திருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சமயபுரம் கோவிலுக்கு சென்றனர். விபத்து குறித்து முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீகாந்த்(25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விஜயலட்சுமியின் உடல் முசிறி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த விஜயலட்சுமிக்கு சதீஸ்குமார்(27) என்ற மகனும், கவுசல்யா(24) என்ற மகளும் உள்ளனர். சமயபுரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் பெண் பலியான சம்பவம் உடன் வந்த பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com