அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவங்களின் கூட்டுப்பயிற்சி தொடக்கம்

அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவங்களின் கூட்டுப்பயிற்சி நேற்று தொடங்கியது.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவங்களின் கூட்டுப்பயிற்சி தொடக்கம்
Published on


* வடகொரியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவங்களின் கூட்டுப்பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த கூட்டுப்பயிற்சி 10 நாட்களுக்கு நடைபெறும்.

* ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் வோல்டா நதியில் 10 பேருடன் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து, தண்ணீரில் மூழ்கியது. இதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்ற 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

* அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள டக்லஸ் பூங்காவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அதனை தொடர்ந்து, அதே பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர்.

* கேமரூன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள லிட்டோரல் பிராந்தியத்தில் ராணுவ வீரர்களுக்கும், ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகளுக்கும் திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். ராணுவத்தினர் மற்றும் பிரிவினைவாதிகள் இடையே இதுபோன்ற நேரடி மோதல் ஏற்படுவது மிகவும் அரிதான சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஈரானின் மேற்கு பகுதியில் உள்ள போயர்-அகமது மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com