தேனிலவுக்கு சிறந்த இடம்; கேரளாவுக்கு விருது

தேனிலவுக்கு சிறந்த இடமாக தேர்வுசெய்யப்பட்ட கேரளாவுக்கு விருது வழங்கப்பட்டது.
தேனிலவுக்கு சிறந்த இடம்; கேரளாவுக்கு விருது
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் சிறந்த தேனிலவு தலமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகை சார்பில் இதற்கான விருது, டெல்லியில் வழங்கப்பட்டது. கேரள சுற்றுலாத்துறை துணை இயக்குனர் மனோஜ், விருதை பெற்றுக்கொண்டார். இதற்கு கேரள சுற்றுலா மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுபோல், சிறந்த ஓட்டல், சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com