வெறிநாய் கடித்து குதிரை பலி: 37 குதிரைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

வெறிநாய் கடித்து சென்னை கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அந்த குதிரை நேற்று உயிரிழந்தது.
Published on

சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் வெறிநாய் ஒன்று அங்கு சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரையை கடித்து விட்டது. இதையடுத்து அந்த குதிரை வெறிபிடித்து அனைவரையும் தாக்க தொடங்கியது. சக குதிரைகளையும் கடித்து தாக்கியது. வெறிநாய் கடித்து சென்னை கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அந்த குதிரை நேற்று உயிரிழந்தது.

இந்த தகவல் கிடைத்தவுடன் சென்னை வேப்பேரியில் செயல்படும் மெட்ராஸ் கால்நடை துயர் தடுப்பு கழக தலைவர் ஹரிஸ் எல்.மேத்தா அங்குள்ள அனைத்து குதிரைகளுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெறிநோய் தடுப்பூசி போடுமாறு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து மெரினாவில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து குதிரைகளும் வேப்பேரிக்கு அழைத்து வரப்பட்டது. அந்த குதிரைகளை கால்நடை மருத்துவர் சொக்கலிங்கம் பரிசோதனை செய்தார். பின்னர் அங்கிருந்த 37 குதிரைகளுக்கும் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாக பொதுமக்கள் தொடர் புகார் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com