பா.ஜனதா தொண்டர்கள் கதர் பொருட்களை வாங்க வேண்டும்: ஜே.பி.நட்டா

மகாத்மா காந்தி பிறந்த தினத்தையொட்டி பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ள கதர் பொருள் விற்பனை கடை ஒன்றுக்கு சென்றார். அங்கு அவர் பல்வேறு கதர் வாரிய பொருட்களை வாங்கினா.
Published on

புதுடெல்லி

செய்தியாளர்களிடம் பேசும்போது, காந்தியின் கனவுக்கு ஏற்ப இந்தியாவை கட்டியெழுப்புவதற்காக மோடி அரசு கிராமப்புற வளர்ச்சி, தூய்மை மற்றும் தற்சார்பு நாடாக உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. மோடி அரசின் கீழ் சுமார் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன. 2014-ம் ஆண்டுக்குப்பிறகு கதர் பொருட்களின் பயன்பாடு 188 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. அவற்றின் உற்பத்தி 101 சதவீதமும், விற்பனை 129 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது என்றார்.

கதர் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் பா.ஜனதா தொண்டர்கள் 2-ந்தேதி (நேற்று) முதல் 7-ந்தேதி வரை கதர் பொருள் விற்பனை கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும் என அறிவுறுத்திய ஜே.பி.நட்டா, அதிக அளவிலான கதர் பொருள் விற்பனை கிராமப்புற வளர்ச்சியை பலப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

ஜே.பி.நட்டாவை போல பல்வேறு பா.ஜனதா தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகளும் நேற்று கதர் வாரிய கடைகளில் பொருட்களை வாங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com