ஜனாதிபதி தேர்தலில் இருந்து புளும்பெர்க் விலகல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக மைக்கேல் புளும்பெர்க் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் இருந்து புளும்பெர்க் விலகல்
Published on

நியூயார்க்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு மாகாணவாரியாக வாக்கெடுப்பு நடந்து வருகிறது.

ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென், செனட்சபை எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் மற்றும் பிரபல தொழிலதிபரும், நியூயார்க் நகர முன்னாள் மேயருமான மைக்கேல் புளும்பெர்க் உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர். மாகாணவாரி ஓட்டெடுப்பில் ஜோ பிடென் மற்றும் பெர்னி சாண்டர்ஸ் ஆகிய 2 பேரும் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், இவர்கள் 2 பேரில் ஒருவர்தான் ஜனநயாக வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக மைக்கேல் புளும்பெர்க் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், டிரம்பை தோற்கடிக்கவே தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாகவும், அந்த காரணத்துக்காகவே தற்போது விலகும் முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தலில் ஜோ பிடெனை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com