டீசல் விலை உயர்வை கண்டித்து கீழக்கரையில் விசைப்படகுகள் வேலை நிறுத்தம்

கீழக்கரையில் டீசல் விலை உயர்வை கண்டித்து விசைப்படகுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
Published on

கீழக்கரை,

டீசல் விலை உயர்வை கண்டித்து கீழக்கரையில் விசைப்படகுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அனைத்து படகுகளும் ஜெட்டி பாலத்தில் கட்டப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கீழக்கரை விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேவியர் பாக்கியசீலர், செயலாளர் சரீப், பொருளாளர் முகமது பாக்கர் அலி ஆகியோர் கூறும்போது, ஏற்கெனவே மீன்பிடி தொழில் நலிவடைந்துள்ளது. தற்போது டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. எனவே டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com