இங்கிலாந்து ; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போரிஸ் ஜான்சனுக்கு சாதகம்

இங்கிலாந்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போரிஸ் ஜான்சனுக்கு சாதகமாக வெளிவந்துள்ளன.
Published on

லண்டன்,

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து விலகுவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது. இதன் தொடர்ச்சியாக உடனடியாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 650 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது.இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெரேமி கார்பைன் தலைமையிலான தொழிலாளர் கட்சியுமே பிரதான போட்டியாளர்களாக கருதப்பட்டது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com