மாங்காட்டில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு

மாங்காட்டில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருடப்பட்டது.
Published on

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45), நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் விசாரணையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த 20 பவுன் நகை மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

மாங்காடு நெல்லிமா நகர் பஜனை கோவில் தெருவை தேர்ந்தவர் லட்சுமி (46). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com