இந்திய வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆப்டிவ் சென்னை தொழில்நுட்ப மையத்தை விரிவுபடுத்துகிறது

இந்திய வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆப்டிவ் சென்னை தொழில்நுட்ப மையத்தை விரிவுபடுத்துகிறது
Published on

சென்னை,இந்தியா

தொழில்துறை சார்ந்த தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக உள்ள ஆப்டிவ் (APTIV PLC) நிறுவனம் சென்னையில் தனது தொழில்நுட்ப மையத்தினை விரிவுபடுத்தியுள்ளது.இந்திய சந்தைக்கான உள்ளூர்மய பொறியியல் மற்றும் புதுமையான திறன்களை வலுப்படுத்துதல் என்ற ஆப்டிவ் நிறுவனத்தின் நோக்கத்தினை நிலைநிறுத்தும் விதமாக இந்த மையத்தினை விரிவுபடுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.

இந்த விரிவாக்கத்தின் மூலம் சுமார் 300  பொறியாளர்கள் புதியதாக  பணியில் சேர்க்கப்படவுள்ளனர். இதன் மூலம் இம்மையத்தில் பணிபுரியும் மொத்த பொறியாளர்களின் எண்ணிக்கை 600-க்கும் மேற்பட்டதாக உயரும். இந்த வளர்ச்சி, மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS), வாகன உட்கட்டமைப்பு (In-Cabin) தொழில்நுட்பங்கள் மற்றும் பிற எதிர்கால நவீன  தளங்களுக்கான மென்பொருள் சார்ந்த தீர்வுகளை வழங்கும் ஆப்டிவ் நிறுவனத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள வலுவான வணிக வளர்ச்சியே இந்த விரிவாக்கத்திற்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக, முன்னணி வாகன உற்பத்தியாளர்களுடன் ADAS தொடர்பான சமீபத்திய திட்டங்களின் வெற்றிகள் போன்றவற்றை கூறலாம்.இந்தியாவின் வேகமாக மாறிவரும் ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப வாகனத் துறையில் மேம்பட்ட  பாதுகாப்பு மற்றும் இயக்கத் தீர்வுகளை வழங்குவதில் ஆப்டிவ் நிறுவனத்தின்  முக்கிய பங்கினை எடுத்துக் காட்டும் விதமாகவும் இந்த விரிவாக்கம்  அமைந்துள்ளது.

இது குறித்து திரு. அருண் தேவராஜ், நிர்வாக இயக்குநர், இன்டெலிஜென்ட் சிஸ்டம்ஸ், ஆசிய-பசிபிக் (சீனாவைத் தவிர), ஆப்டிவ் நிறுவனம் -  “சென்னையில் உள்ள எங்கள் தொழில்நுட்ப மையத்தின் விரிவாக்கம், ஆப்டிவ் நிறுவனத்தின் இந்தியா உடனான ஆழமான வணிக உறவினையும்,  நாட்டின் சிறப்பான பொறியியல் திறமைகளின் மீதான எங்கள் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார். மேலும், நாங்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளை நிறைவு செய்யும் உயர்தர உள்ளூர்மயமான தீர்வுகளை வழங்குவதே எங்கள் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. ஆப்டிவ் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளில் புதுமை, பொறியியல் சிறப்பு மற்றும் செயலாக்கத்திற்கான முக்கிய மையமாக சென்னை தொழில் நுட்ப மையம் வலுப்பெறும் என்றும் திரு.அருண் தேவராஜ் தெரிவித்தார்.

இந்த விரிவாக்கம், உள்ளூர் திறன்களை உருவாக்குதல், வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்துறை கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் மற்றும் இந்தியாவின் இயக்கத் துறையின் (Mobility Ecosystem) மாற்றத்திற்குப் பங்களித்தல் ஆகியவற்றில் ஆப்டிவின் நீண்டகால உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

ஆப்டிவின் சென்னை தொழில்நுட்ப மையம் ஆகஸ்ட் 2025-இல் தொடங்கப்பட்டது. மேலும், 2024-ஆம் ஆண்டில், முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட, மென்பொருள் மைய  (Software-Defined) வாகன உட்கட்டமைப்பு  தீர்வுகளை உற்பத்தி செய்வதற்காக, சென்னை ஒரகடத்தில் உள்ள தனது உற்பத்தி நிலையத்தை விரிவுபடுத்த கூடுதல் முதலீடுகளை நிறுவனம் அறிவித்தது.

ஆப்டிவ் நிறுவனம் குறித்து :

Aptiv PLC (NYSE: APTV) என்பது உலகளாவிய அளவில் தொழில்துறை சார்ந்த தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமாகும். வாகனத் தொழில்நுட்பம் , வர்த்தக வாகனங்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை, தொலைத்தொடர்பு மற்றும் தரவுத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை சந்தைகளில், மக்களால் மிகவும் நம்பப்படுகிற மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குகிறது.ஆப்டிவ் நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பு மற்றும் தீர்வுகளானது தொழில்துறை சாதனங்கள் மற்றும் அமைப்புகளின் செயல்திறன்களை தொடர்ந்து மேம்படுத்த உதவுகிறது.மேலும், பல ஆண்டுகளாக புத்தாக்க தயாரிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தனது உலகளாவிய இருப்பையும், வலுவான உள்ளூர்மய மதிப்புச் சங்கிலியையும் பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது ஆப்டிவ் நிறுவனம்.

நிறுவனம் குறித்து மேலும் தகவல்களை அறிந்து கொள்ள “www.aptiv.com” என்ற இணையதளத்தினை பார்வையிடவும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com