மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன..?

இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது .
மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே போக்கு காட்டி வருகிறது. முதலீட்டாளர்களின் கவனம் ஒரு நாள் தங்கத்தின் பக்கமும், மறுநாளில் பங்கு சந்தைகள் பக்கமும் மாறி மாறி செல்வதால் இந்த நிலை நீடிக்கிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கும் வந்தது.அதன் பின்னரும், விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. அதிலும் இந்த மாதம் கடந்த 13-ந்தேதி விலை அதிகரித்து வந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்து, பிறகு விலை குறைந்தது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.11,770-க்கும், ஒரு சவரன் ரூ.94,160-க்கும்விற்பனை செய்யப்பட்டது . வெள்ளி விலை, கிராமுக்கு ரூ.4-ம் , கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது . கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து தங்கம் ஒரு கிராம் ரூ.11,840-க்கும், ஒரு சவரன் ரூ.94,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com