அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
x

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று 2-வது நாளாக அதிகரித்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை

2025-ம் ஆண்டில், தங்கத்தின் விலை ஏற்றம் அசாத்தியமானதாக இருந்தது. கடந்த ஆண்டு சுமார் 52 முறை புதிய உச்சங்களை எட்டியது. யாரும் எதிர்பாராத வகையில் சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்தது. இது நகை மற்றும் முதலீட்டு பொருட்களில் ஆர்வமுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்தது. நகை வாங்கும் நடுத்தர இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

அதன் பின்னர், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,800க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் நேற்று குறைந்திருந்தது.

இன்றைய தங்கம் விலை;

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,900-க்கும், சவரன் ரூ.1,03,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை;

வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.7,000 அதிகரித்து ரூ.2,75,000க்கும், கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ஒரு கிராம் ரூ.275க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 7 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

10.01.2026 ஒரு சவரன் ரூ.1,03,200 (இன்று)

09.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,400 (நேற்று)

08.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,000

07.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,400

06.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,080

04.01.2026 ஒரு சவரன் ரூ.1,00,800

1 More update

Next Story