தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது


தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது
x

கடந்த 5 நாட்களாக எந்த மாற்றமுமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னை:

தங்கம் விலை இந்த ஆண்டின் துவக்கத்தில் சவரன் 64 ஆயிரத்தை கடந்து உச்சத்தை எட்டியது. அதன்பின்னர் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,020-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு கிலோ ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:

10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400

09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320

08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320

07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,240

06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,480

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:

10-03-2025- ஒரு கிராம் ரூ.108

09-03-2025- ஒரு கிராம் ரூ.108

08-03-2025- ஒரு கிராம் ரூ.108

07-03-2025- ஒரு கிராம் ரூ.108

06-03-2025- ஒரு கிராம் ரூ.108

1 More update

Next Story