தொடர்ந்து ‘ஷாக்’ கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கு விற்பனை ஆனது.
சென்னை,
தங்கம் விலை கடந்த 16-ந்தேதியில் இருந்து தாறுமாறாக எகிறி வருகிறது. தினமும் விலை அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து எகிறி வந்த நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,720 சரிந்து, சற்று ஆறுதலை கொடுத்து, நேற்று மீண்டும் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.
இப்படியான விலை ஏற்றம் தங்கத்தை வாங்க நினைப்பவர்களுக்கு பெரிய ‘ஷாக்' கொடுத்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.450-ம், சவரனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை, கிராமுக்கு ரூ.1,480-ம், சவரனுக்கு ரூ.11 ஆயிரத்து 840-ம் அதிகரித்திருந்தது.
வெள்ளி விலை நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.20-ம், கிலோவுக்கு ரூ.20 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.360-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
தங்கம் விலை
இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரணமான சூழலால், தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3,55,000-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.355-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
24.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,960
23.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,400
22.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
21.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,320
20.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,200
19.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,07,600






