ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.130 உயர்ந்து ரூ.14,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தங்கம் விலை கடந்த 16-ந்தேதியில் இருந்து தாறுமாறாக எகிறி வருகிறது. தினமும் விலை அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை, கிராமுக்கு ரூ.1,480, சவரனுக்கு ரூ.11,840 அதிகரித்திருந்தது.
வெள்ளி விலை நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.20, கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.360-க்கும், ஒரு கிலோ ரூ.3,60,000-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் மொத்தம் ரூ.1,600 உயர்ந்து தற்போது ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.130 உயர்ந்து ரூ.14,750-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போல் வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளி விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ஒரே நாளில் ரூ.20,00 உயர்ந்து ரூ.3,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
24.01.2026(மாலை) - ஒரு சவரன் - ரூ.1,18,000
24.01.2026(காலை) - ஒரு சவரன் - ரூ.1,16,960
23.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,400
22.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
21.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,320
20.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,200






