தங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி.. மாலை நிலவரப்படி எவ்வளவு?


தங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி.. மாலை நிலவரப்படி  எவ்வளவு?
x
தினத்தந்தி 20 Jan 2026 4:12 PM IST (Updated: 20 Jan 2026 4:22 PM IST)
t-max-icont-min-icon

தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று கருதி பலரும் நாடுவதால் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. கடந்த மாதம் 28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வருகிறது.

நேற்று தங்கம் விலை அதிகரித்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,07,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.170 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,450-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் சற்று உயர்ந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 அதிகரித்து, ரூ.3,18,000-க்கும், கிராமுக்கு ரூ.8 அதிகரித்து. ஒரு கிராம் ரூ.318-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,08,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,610-க்கு விற்பனை செய்யப்பட்டு விற்பனை ஆனது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று காலை ரூ. 12,000 அதிகரித்து, ரூ.3,30,000-க்கும், கிராமுக்கு ரூ.12அதிகரித்து. ஒரு கிராம் ரூ.330-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில்,ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி,

தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.2,320 அதிகரித்தது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாயை கடந்தது.

தங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வெள்ளி கிராமுக்கு ரூ.12 உயர்ந்த நிலையில், பிற்பகலில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.

கிலோவுக்கு ரூ.22,000 உயர்ந்து ரூ.3,40,000க்கு வெள்ளி விற்பனையாகிறது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.22 வீதம் கிலோவுக்கு ரூ.22,000 வரை வெள்ளி விலை உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று கருதி பலரும் நாடுவதால் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

1 More update

Next Story