தங்கம், வெள்ளி விலை உயர்வு...இன்றைய நிலவரம் என்ன?


Today Gold Rate in Chennai 05.01.2026
x
தினத்தந்தி 5 Jan 2026 9:38 AM IST (Updated: 5 Jan 2026 9:41 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது

சென்னை

சென்னை,

தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 2 முறை மாற்றம் கண்டது. காலை குறைந்த தங்கம் விலை மாலை சற்று அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை காலை ரூ.60 குறைந்த நிலையில், மாலை ரூ.80 உயர்ந்து, ரூ.12,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து, ரூ.1,00,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.257-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து, ரூ.2,57,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இன்று ரூ.80 உயர்ந்து ரூ.12,680-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,01, 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 உயர்ந்து, ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story