மத்திய அரசு துறைகளில் என்ஜினீயர் பணிகளுக்கான தேர்வு

மத்திய அரசு துறைகளில் என்ஜினீயர் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 581 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
Published on

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.), மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்படுகிறது. தற்போது மத்திய அரசு துறைகளில் உள்ள என்ஜினீயரிங் சார்ந்த பணியிடங்களை நிரப்ப, 2019-க்கான என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் 581 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்தியன் ரெயில்வே, மத்திய பொறியியல் சேவைப் பிரிவு, ராணுவ தளவாட தொழிற்சாலைகள், மக்கள் கணக்கெடுப்புத் துறை, எல்லையோர சாலைப் பொறியியல் பிரிவு, ராணுவத்தின் பொறியியல் பிரிவு, டெலிகாம் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-1-2019-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1989 மற்றும் 1-1-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் போன்ற பிரிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, முதுநிலை அறிவியல் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 22-10-2018-ந் தேதியாகும். இதற்கான முதல்நிலைத் தேர்வு 6-1-2019-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com